சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி அபய் குமார் சிங் நியமனம்

சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி அபய் குமார் சிங் நியமனம்
x
தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவராக ஐ.ஜி. நிலையில் உள்ள பொன். மாணிக்கவேல் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், அந்த துறை தலைவராக ஏ.டி.ஜி.பி. அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு காகித ஆலை நிறுவன கண்காணிப்பு அதிகாரியாக இருந்த அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். ஐ.ஜி. பொறுப்பில் ஒருவர் தலைவராக இருந்து வந்த நிலையில் தற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏ.டி.ஜி.பி. அந்தஸ்து அதிகாரியை தலைவராக  நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்