இந்திய ராணுவ வீரர்களுக்கு ஈஷாவில் ஹதயோகா பயிற்சி

கோவை ஈஷா யோகா மையம் சார்பாக இந்திய ராணுவ வீரர்களுக்கு ஹதயோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்திய ராணுவ வீரர்களுக்கு ஈஷாவில் ஹதயோகா பயிற்சி
x
இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள், ஜேசிஓ அதிகாரிகள் உட்பட 64 வீரர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டது. கடந்த நவம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பயிற்சி 14 நாட்கள் நடைபெற்று, இன்றுடன் நிறைவடைந்தது. இந்த பயிற்சியின் போது மற்ற வீரர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக சில வீரர்களுக்கு, ஹதயோகா பயிற்சியாளர் ஆவதற்கான பிரத்யேக பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதற்கு முன்பாக பிஎஸ்எஃப் பெண்கள் உட்பட 3 பிஎஸ்எஃப் குழுவினர் இந்த ஹதயோகா பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்