பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு : ஆளுநர், முதல்வருக்கு முருகனின் மனைவி கடிதம்

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என அந்த வழக்கில் கைதாகியுள்ள முருகனின் மனைவி, ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு : ஆளுநர், முதல்வருக்கு முருகனின் மனைவி கடிதம்
x
* மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வழக்கில் தொடர்புடையதாக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

* அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், முருகனின் மனைவி கஜா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நிர்மலா தேவி வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி எஸ்.பி ராஜேஸ்வரி, தனது சுய ஆதாயத்திற்காக உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதாக சுஜா குற்றம்சாட்டியுள்ளார். நேர்மையான அதிகாரிகள் மூலம் வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும், தனது கணவர் முருகனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சுஜா தனது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்