"ஜாக்டோ- ஜியோ போராட்டம் நியாயமானது, டிச.4ம் தேதி போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும்" - ஸ்டாலின்

ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தை தள்ளிவைக்குமாறு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜாக்டோ- ஜியோ போராட்டம் நியாயமானது, டிச.4ம் தேதி போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் - ஸ்டாலின்
x
ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தை தள்ளிவைக்குமாறு, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில், வரும் டிசம்பர் 4-ஆம் தேதியிலிருந்து, காலவரையறை அற்றப் போராட்டம் அறிவித்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். இந்த அறவழிப் போராட்டம் நியாயமானது என்றாலும், கஜா புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், இதனை ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்வதாக, அவர் கூறியுள்ளார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, போராட்டங்கள் நடத்தாமலேயே, நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதியளிப்பதாகவும், ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்