"ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நோய் தொற்று சிகிச்சையில் சரியானது" - சிறப்பு மருத்துவர் வாக்குமூலம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நோய் தொற்று தொடர்பான அப்பலோ அறிக்கைக்கும், அப்பலோ மருத்துவர் அளித்த வாக்குமூலத்துக்கும் இடையே முரண்பாடு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நோய் தொற்று சிகிச்சையில் சரியானது - சிறப்பு மருத்துவர் வாக்குமூலம்
x
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான  விசாரணை ஆணையம் முன், அப்பலோ மருத்துவமனை நோய் தொற்று சிறப்பு மருத்துவர் ராமகோபால கிருஷ்ணன், நரம்பியல் பிரிவு டெக்னீசியன் யுவ ஸ்ரீ, தீவிர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் பஞ்சாபிகேசன் உள்ளிட்டோர் ஆஜராகினர். அப்போது, 2016-ம் அண்டு நவம்பர் 15 -ம் தேதிக்குள் ஜெயலலிதாவுக்கு  இருந்த நோய் தொற்று முழுமையாக சரியாகிவிட்டதாக மருத்துவர் ராமகோபால கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்தார். ஆனால் நோய் தொற்று காரணமாக இதயம், நுரை​யீரல் பாதிக்கப்பட்டது தான் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் என அப்பலோ மருத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவர் வாக்குமூலத்துக்கும், மருத்துவ அறிக்கையிக்கு வேறுபாடு உள்ளதால் இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்