தொடர்ந்து குறைகிறது பெட்ரோல், டீசல் விலை

வரலாறு காணாத உச்சத்தில் இருந்த பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து குறைகிறது பெட்ரோல், டீசல் விலை
x
* சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததால், கடந்த அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி வரை, பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வந்தது. எண்பது ரூபாயை தாண்டிய பெட்ரோல், டீசல் விலையால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

* ஆனால் அதற்கு பின்னர், கச்சா எண்ணெயின் விலை சரிந்ததால், பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 9 ரூபாய் அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது.
 
* சென்னையில், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல், 76 ரூபாய் 88 காசுகளுக்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையைவிட 44 காசுகள் குறைவு.

* இதேபோல், டீசல் விலையும், 43 காசுகள் குறைந்து 72 ரூபாய் 77 காசுகளுக்கு விற்பனையாகிறது. 

* இந்த விலைவீழ்ச்சி தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்