தண்டனை கைதிகளின் விடுதலை குறித்து பரிசீலிக்க எந்த சட்ட விதிகளும் மத்திய அரசிடம் இல்லை - ஆர்டிஐ பதில்

தண்டனை கைதிகளின் விடுதலை குறித்து பரிசீலிக்க எந்த சட்ட விதிகளும் மத்திய அரசிடம் இல்லை என்று ஆர்டிஐ மூலம் பேரறிவாளன் எழுப்பிய கேள்விக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது.
தண்டனை கைதிகளின் விடுதலை குறித்து பரிசீலிக்க எந்த சட்ட விதிகளும் மத்திய அரசிடம் இல்லை - ஆர்டிஐ பதில்
x
* தண்டனை கைதிகளின் விடுதலை விதிகளின் நகல், தண்டனை கழிவுகளை மாநில அரசு வழங்குவதை தடுக்கும் மத்திய அரசின் உத்தரவு நகல் உள்ளிட்ட 4 கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய தகவல் ஆணையத்திற்கு பேரறிவாளன் அனுப்பியிருந்தார். 

* இது தொடர்பாக அவர் மத்திய தகவல் ஆணையரிடம் காணொளி மூலம் தனது வாதங்களை பேரறிவாளன் வைத்தார். 

* மத்திய அரசிடம் இருந்து தகவல் ஆணையம் மூலம் உரிய பதில் கிடைக்காத நிலையில், பேரறிவாளன் உட்பட 7 பேரை முன் கூட்டியே விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை அனுப்பியது, 

* தீர்மானம் அனுப்பப்பட்டு 75 நாட்களுக்கு மேல் ஆன நிலையில்,  ஆளுநர் அதன்மீது எந்த இறுதி முடிவையும் இதுவரை எடுக்கவில்லை 

 * இந்நிலையில் கடந்த 5-ம் தேதி உள்துறை அமைச்சக பொது தகவல் அலுவலர் பேரறிவாளனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

* அந்த கடிதத்தில் 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரை கோப்பு , குடியரசு தலைவருக்கு அனுப்பப்படவில்லை என்றும்,  குற்ற விசாரணை முறைசட்ட பிரிவு 435-ன் கீழ் உள்துறை அமைச்சக அளவிலேயே முடிவெடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். 

* மேலும் தண்டனை கைதிகளின் விடுதலை குறித்து பரிசீலிக்க எந்த சட்ட விதிகளும் மத்திய அரசிடம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். 

* இதன் மூலம் 7 பேர் விடுதலையில் மத்திய அரசின் தலையீடு இனி தொடர வாய்ப்பில்லை என்றும், அவர்களது விடுதலையை இனியும் தள்ளிப்போட முடியாது என்றும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

* தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 13 ஆண்டு காலம் தண்டனை முடிந்த நிலையில் அதிமுகவினர் மூவர் விடுதலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டும் சட்ட வல்லுநர்கள், அவர்களுக்கு தண்டனை வழங்கிய இந்திய தண்டனை சட்டத்தின் படியே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

* அதிமுகவினர் மூவரும் அரசியல் சாசன சட்டத்தின் 161வது பிரிவின் படி ஆளுநரால் விடுதலை செய்யப்பட்டது போல் இவர்கள் 7 பேர்களும் விடுதலை செய்யப்படலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்