தனி விமானத்தை தடுத்த நிறுத்திய உடும்பு : விமானத்தில் திமுக தலைவர், நிர்வாகிகள் இருந்ததால் பரபரப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலின், சென்னை செல்வதற்காக சேலம் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலின், சென்னை செல்வதற்காக சேலம் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார். அங்கு ரன்வேயில் சென்ற தனி விமானம் சிறிது நேரம் ரன்வேயிலேயே நின்றது. இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள் ஜீப்பில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது விமானத்தின் முன்பாக ஊர்ந்து வந்த உடும்பை அதிகாரிகள் விரட்டினர். அதனைதொடர்ந்து விமானம் புறப்பட்டு சென்றது. இதனால் அங்கு சிறிது பரபரப்பு உண்டானது.
Next Story