திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
x
திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோயிலில் 
தீபத்திருவிழாவையொட்டி, சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் காலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பு எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து சரியாக 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி, சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் முன்பு வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்