தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை

கும்பகோணத்தில் தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை
x
கும்பகோணத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை : மக்கள் வீட்டிலேயே தஞ்சம்

கும்பகோணத்தில் தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். இங்குள்ள சுந்தர பெருமாள் கோவில் ஊராட்சியில் தொடர்ந்து மூன்று மணி நேரம் மழை பெய்தது. கஜா புயலை விட தற்போது அதிகமாக மழை பெய்து வருவதாகவும், இந்த தொடர் மழையால் தெருக்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நிற்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.  

மயிலாடுதுறை : தொடர் மழையால் சாலைகளில் தேங்கிய நீர் 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதிய வடிகால் வசதி இல்லாததால் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். 

திருச்சி  : காலை முதல் ஆங்காங்கே கனமழை

திருச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இன்று காலை முதல் ஸ்ரீரங்கம், உறையூர், மன்னார்புரம், பொன்மலை, தில்லை நகர், கே.கே.நகர்,  உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதே போல் புறநகர் பகுதிகளான மண்ணச்சநல்லூர், துறையூர், லால்குடி, திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிலும் கன மழை பெய்து வருகிறது. 

தஞ்சாவூர் கனமழை : நிவாரண பணி பாதிப்பு 

கஜா புயலால் பாதிப்படைந்துள்ள தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, திருவோணம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது பெய்து வரும் கனமழையால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்