'இலக்கியங்களில் பெண் வன்கொடுமைகள்' - திருச்சி கல்லூரி அறிவித்த தலைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் தமிழ் துறை சார்பில் இலக்கியங்களில் பெண் வன்கொடுமைகள் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு கருத்தரங்கம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
x
இலக்கியப்பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் என்ற தலைப்பில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் வரும் டிசம்பர் மாதம் 6,7 ஆகிய தேதிகளில் ஒரு கருத்தரங்க நடைபெறவுள்ளது. இதற்காக ஒரு கட்டுரைப் போட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்தான் ஆன்மீகம், மற்றும் இலக்கிய வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பெண்ணடிமைச் சிந்தனைகள், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றி கட்டுரை எழுத கல்லூரியின் தமிழ்த்துறை தலைப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த தலைப்புகள்தான் சர்ச்சைக்கு பிள்ளையார்சுழி போட்டுள்ளது. 

கருத்தரங்க பற்றி கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் செல்வக்குமாரிடம் கேட்ட போது,கொடுக்கப்பட்ட தலைப்புகள் அனைத்தும் மாதிரி தலைப்புகள்தான். எந்த தலைப்புகளில் வேண்டுமானாலும் கட்டுரைகள் எழுதலாம் என்றுதான் மாணவர்களிடம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மாணவர்கள் எழுதிய கட்டுரைகள் எதுவும் வெளியிடப்பட்ட மாதிரி தலைப்புகளை மையப்படுத்தியதாக இல்லை என்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்