"1 ஏக்கர் தென்னைக்கு நிவாரணம் ரூ.1 லட்சம் என்றால் நியாயமா?" - சிபிஎம் பாலாகிருஷ்ணன்

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறி விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
x
கஜா புயல் பாதிப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறி விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். பட்டுக்கோட்டை பகுதியில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.  8 வழிச்சாலை திட்ட பணிகளுக்கு, ஒரு தென்னை மரத்திற்கு 27 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்கிய அரசு, புயல் பாதிப்பு நிவாரணமாக ஒரு ஏக்கர் தென்னைக்கு ஒரு லட்ச ரூபாய் மட்டும் வழங்குவது 
நியாயமா என கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்