கடும் பாதிப்புக்குள்ளான பகுதிகளை முதலமைச்சர் பார்க்கவில்லை - அன்புதணி ராமதாஸ்
கஜா புயலால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வேதாரண்யம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளை பார்க்காமல், மழையை காரணம் காட்டி முதலமைச்சர் பழனிசாமி திரும்பியதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வேதாரண்யம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளை பார்க்காமல், மழையை காரணம் காட்டி முதலமைச்சர் பழனிசாமி திரும்பியதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் வந்திருப்பதை அறிந்து மனு கொடுப்பதற்காக வந்த மக்கள் விரட்டியடிக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளார். மக்களையே சந்திக்காமல் திரும்பியதற்கு, மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story

