தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் விளக்கம்

தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் தண்டனை பெற்ற 3 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் விளக்கம்
x
கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை 3 முறை பரிந்துரை செய்த போதும், அது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டதை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 161-ன் கீழ் ஆயிரத்து 627 கைதிகள் விடுதலை செய்யப்பட்டதும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. தலைமையிலான குழு முழுவதுமாக ஆய்வு செய்து கைதிகள் விடுதலை தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்ததையும், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், மற்றும் சட்டத்துறை செயலாளர் அடங்கிய 3 பேர் குழு அந்த பரிந்துரையை ஏற்றதையும், அதனைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஒப்புதலுக்கு பின்னர் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விடுதலை தொடர்பாக ஆளுநரின் சந்தேகங்களுக்கு தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோர், அக்டோபர் 31 ஆம் தேதி நேரில் விளக்கம் அளித்தனர் எனவும் கொலை செய்யும் திட்டத்துடன் செயல்படவில்லை என்றும், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நடைபெற்ற நிகழ்வுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளதை சுட்டிக்காட்டியதாகவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இவர்களை விடுதலை செய்வதால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என தலைமை செயலாளரும், தலைமை அரசு வழக்கறிஞரும் உறுதி அளித்ததை தொடர்ந்தே, 3 பேரின் விடுதலை பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்