சென்னையில் 2190 கிலோ நாய் இறைச்சி பறிமுதல்

ராஜஸ்தானில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரத்து 190 கிலோ நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் 2190 கிலோ நாய் இறைச்சி பறிமுதல்
x
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த ஜோத்பூர் -  மன்னார்குடி விரைவு ரயிலில் இருந்து இறக்கப்பட்ட பெட்டிகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். அந்தப் பெட்டிகளில் 2 ஆயிரத்து 190 கிலோ எடை கொண்ட நாய் இறைச்சி இருந்ததை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, அழுகிய நிலையில் இருந்த இறைச்சிகளின் மாதிரியை எடுத்து  வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதன் முடிவுகள் நாளை தெரியும் என்று கூறப்படுகிறது. இவை சென்னையில் உள்ள ஓட்டல்களுக்கு ஆட்டிறைச்சிக்கு பதிலாக பயன்படுத்த கொண்டு வரப்பட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பொதுமக்கள்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்