சிலைகள் தொன்மை தன்மை குறித்து தியாகராஜர் கோயிலில் 3ஆம் கட்டமாக ஆய்வு

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 3ஆம் கட்டமாக இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சிலைகள் தொன்மை தன்மை குறித்து தியாகராஜர் கோயிலில் 3ஆம் கட்டமாக ஆய்வு
x
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழக கோயில்களில் உள்ள சிலைகளின் தொன்மை மற்றும் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் 3ஆம் கட்டமாக இன்று ஆய்வு நடத்தப்படுகிறது. உலோக சிலைகளின் எடை, நீளம், அகலம் ஆகியவை அளவெடுக்கப்படுவதுடன், சிலைகளின் பழைய புகைப்படம் மற்றும் அளவுகளுடன் தற்போதுள்ள அளவீடுகள் ஒத்துபோகிறதா என ஆய்வு செய்யப்படுகிறது. இன்று தொடங்கிய இந்த ஆய்வு மூன்று தினங்களுக்கு நடைபெற உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்