21 லட்சம் மதிப்பிலான தங்கம், செல்போன்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
21 லட்சம் மதிப்பிலான தங்கம், செல்போன்கள் பறிமுதல்
x
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட  21 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள்  பறிமுதல் செய்யப்பட்டது. கொழும்பில்  இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பாத்திமா என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், 6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் மலேசியாவில் இருந்து வந்த முகமது நிசாம் என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது, 40 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விலை உயர்ந்த செல்போன்கள், கைகடிகாரங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்