நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் : மாநகராட்சி அதிகாரிகள் மீது நீதிபதிகள் அதிருப்தி

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் : மாநகராட்சி அதிகாரிகள் மீது நீதிபதிகள் அதிருப்தி
x
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர்  காணொலி காட்சி மூலம் சென்னையில் இருந்து விசாரித்தனர். அப்போது, பனையூர் கால்வாய் , வண்டியூர் கண்மாய், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட்டும் மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர் என்று அவர்கள் அதிருப்தி  தெரிவித்தனர். வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உள்ள நிலையில் ஆக்கிரமிப்பு அகற்ற மேலும் கால அவகாசம் கோருவதை ஏற்று கொள்ள முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகர காவல் ஆணையர் தேவையான பாதுகாப்பு தர வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்