கன்னியாகுமரி மூதாட்டியிடம் நூதன கொள்ளை...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த ராதாமணி, பென்ஷன் தொகையை எடுக்க வங்கிக்கு சென்று கொண்டு இருந்துள்ளார்.
கன்னியாகுமரி மூதாட்டியிடம் நூதன கொள்ளை...
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த ராதாமணி, பென்ஷன் தொகையை எடுக்க வங்கிக்கு சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அவ்வழியே சென்ற ஒருவர், பெண்களிடம் மர்ம கும்பல் நகையை பறித்து செல்வதாக கூறி, நகையை கைப்பைக்குள் வைத்துக் கொள்ளுங்கள் என்று ராதாமணியிடம் கூறி உள்ளார். பின்னர், ராதாமணி, 12 சவரன் நகையை கழற்றிய போது அதை வாங்கி காகிதத்தில் பொட்டலமாக்கி கொடுத்துள்ளார். சற்று நேரம் கிழித்து சந்தேகத்துடன் காகிதத்தை பிரித்து பார்த்த ராதாமணி, அதில் கவரிங் நகைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் ராதாமணி அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்