குட்கா முறைகேடு குறித்த வழக்கு : இரு அதிகாரிகள் ஜாமீன் மனு தள்ளுபடி

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட கலால் வரித்துறை அதிகாரி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குட்கா முறைகேடு குறித்த வழக்கு : இரு அதிகாரிகள் ஜாமீன் மனு தள்ளுபடி
x
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட கலால் வரித்துறை அதிகாரி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடை செய்யபட்ட குட்கா மற்றும் பான்மசாலா பொருட்களை விற்பனை செய்ததாக குட்கா ஆலை உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ் மற்றும் உமாசங்கர் குப்தா, கலால் வரித்துறை அதிகாரி என்.கே. பாண்டியன் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் இரண்டாவது முறையாக செந்தில் முருகன், என்.கே.பாண்டியன் ஆகியோர் ஜாமீன் கேட்டு சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்து, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீல பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்