அரூர் சிறுமி வன்கொடுமை கொலை வழக்கு : 3 நாள் போராட்டத்திற்கு பிறகு உடல் ஒப்படைப்பு

அரூரில் பாலியல் வன்கொடுமைக்கு பலியான சிறுமியின் உடலை 3 நாள் போராட்டத்திற்கு பிறகு பெற்றுக்கொண்ட பெற்றோர் நள்ளிரவில் அடக்கம் செய்தனர்.
அரூர் சிறுமி வன்கொடுமை கொலை வழக்கு : 3 நாள் போராட்டத்திற்கு பிறகு உடல் ஒப்படைப்பு
x
தர்மபுரி மாவட்டம் சிட்லிங் கிராமத்தை சேர்ந்த பிளஸ்ஒன் மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு பலியானார். சிறுமி உடலை வாங்க மறுத்து, 3 நிபந்தனைகளை முன்வைத்து பெற்றோர் மற்றும் அரசியல் அமைப்பினர் கடந்த 3 நாட்களாக போராட்டம் மேற்கொண்டனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையின் போது கோட்டப்பட்டி காவல் ஆய்வாளரை பணிநீக்கம் செய்து வழக்கு தொடரவேண்டும், விடுதி பொறுப்பாளர் மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 3 நிபந்தனைகள் அடங்கிய மனுவை மாவட்ட கண்காணிப்பாளர் மகேஷ்குமாரிடம் சிறுமியின் பெற்றோர் வழங்கினர். இதனை தொடர்ந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர் நள்ளிரவில் அடக்கம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்