பாலாறு பிரச்சினை - ஜெயக்குமார் பதில்

பாலாறு பிரச்சினை குறித்து துரைமுருகன் வெளியிட்ட அறிக்கைக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலறிக்கை வெளியிட்டுள்ளார்
பாலாறு பிரச்சினை - ஜெயக்குமார் பதில்
x
தம்மை சந்தித்த சந்திரபாபு நாயுடுவிடம், பாலாறு பற்றி பேசியிருக்கலாமே  ஸ்டாலின் பேசியிருக்கலாமே  என்ற கேள்விக்கு பதில் கூற முடியாமல் துரைமுருகன் அறிக்கை விடுத்துள்ளதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா உரிய நேரத்தில் எடுத்த சட்ட நடவடிக்கையினால் மட்டுமே, பாலாறு பிரச்சினைக்கு தீர்வு காணும் வரையில் ஆந்திர அரசு அணை கட்டும் திட்டத்தை நிறுத்தி வைக்க முடிந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டு மக்கள் நலனில் சிறிது கூட அக்கறை இல்லாத திமுகவினருக்கும், துரைமுருகனுக்கும் பாலாறு பிரச்சினை குறித்து பேச தகுதி இல்லை என்று அவர் விமர்சித்துள்ளார் . தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை  மாநில அரசு எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்