ஆரஞ்சு பழத்தோலில் இருந்து சோப்பு தயாரித்து மாணவர்கள் சாதனை

ஆரஞ்சு பழத்தோலில் இருந்து சோப்பு தயாரித்து, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்
ஆரஞ்சு பழத்தோலில் இருந்து சோப்பு தயாரித்து மாணவர்கள் சாதனை
x
பள்ளி கல்வித்துறை சார்பில் மயிலாடுதுறையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ராகுல், அபிகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆரஞ்சு பழ தோலை உரமாகவும், சோப்பு தயாரிக்க மூலப்பொருளாகவும் பயன்படுத்தலாம் என்பதை கண்டறிந்து, அவர்கள் அறிவியல் படைப்பாக்கி இருந்தனர். பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ள இந்த கண்டுபிடிப்பிற்காக மாணவர்கள் ராகுல், அபிகரன் இருவரும்  இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக  தோந்தெடுக்கப்பட்டுள்ளனர். கோவையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் தங்கள் கண்டு பிடிப்பை இம்மாணவர்கள் காட்சிப்படுத்த உள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்