"தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 97 வது நிறுவன தினவிழா"

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 97 வது நிறுவன தினவிழா நடைப்பெற்றது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 97 வது நிறுவன தினவிழா
x
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 97 வது நிறுவன தினவிழா  நடைப்பெற்றது. வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தலைமையில் நடந்த விழாவில், ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  இதனை தொடர்ந்து தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் ரூபே இன்டர்நேசனல் கார்டு, எளிய பரிவர்த்தனைக்கான டெபிட் கார்டினை அவர் அறிமுகம் செய்து வைத்தார் . பின்னர் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற வங்கி ஊழியர்களின் குழந்தைகளுக்கு ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார். இதனை தொடர்ந்து மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்