உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் திட்டம் : விவசாயிகள் போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து ஈரோடு, சேலம் உள்ளிட்ட ஆறு மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் திட்டம் : விவசாயிகள் போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
x
விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து, சேலம், ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல் துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து  விவசாயிகள் சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விவசாயிகளுக்கு போராட்டம் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும் ஒரு வாரத்தில் போராட்ட தேதியை காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே காவல்துறை தலையிட வேண்டும் என்றும்,  போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு காவல்துறை போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்