விருதுநகரில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் : 6 பேர் கைது

விருதுநகரில் 36 லட்சத்திற்கும் அதிகமான கள்ள நோட்டுகள் சிக்கியுள்ளன.
விருதுநகரில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் : 6 பேர் கைது
x
விருதுநகர் கடைத்தெருவில் பேக்கரி ஒன்றில் 3ஆயிரத்து 400 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றதாக கோபிநாத், சூர்யா என இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 33 ஆயிரத்து 150 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.  அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இந்த விவகாரத்தில் மேலும் பலர் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில், ராஜபாளையம் எம்.புதுப்பட்டியை சேர்ந்த ராஜகோபால், மதுரை மாவட்டம் கவரிமான் பகுதியை சேர்ந்த இளங்கோ ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், மேலும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 36 லட்சத்து 33 ஆயிரத்து 950 என போலீசார் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்