இ​ளைஞரை தாக்கி செல்போன் மற்றும் பணம் வழிப்பறி : மர்மநபர்கள் கைவரிசை
பதிவு : நவம்பர் 07, 2018, 09:08 AM
காஞ்சிபுரத்தில் பட்டபகலில் இளைஞரை தாக்கி செல்போன் மற்றும் 13 ஆயிரத்து 500 ரூபாயை மர்மநபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் பட்டபகலில் இளைஞரை தாக்கி செல்போன் மற்றும் 13 ஆயிரத்து 500 ரூபாயை மர்மநபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். களியணூர் கிராமத்தை சேர்ந்த அருண்குமாரிடம், கீரை மண்டபம் பகுதியில் வந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அருண்குமாரிடம் வாக்குவாதம் செய்து தாக்குதல் நடத்தி, செல்போன் மற்றும் பணத்தை, வழிப்பறி செய்தனர்.காயம் அடைந்த அருண்குமார், மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.