சிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு : சாதியை மாற்றி தேர்வு பட்டியலில் இடமா?

சிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் சாதியை மாற்றி பலர் தேர்வு பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு : சாதியை மாற்றி தேர்வு பட்டியலில் இடமா?
x
அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களை கற்றுக்கொடுக்க ஆயிரத்து 325 ஆசிரியர்களை முழு நேர அடிப்படையில் நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், அந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும், சாதியை மாற்றி பலர் தேர்வு பட்டியலில் இடம்பிடித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்வழி பொருந்தாத ஓவியப் பாடப்பிரிவுக்கு பலர் போலி சான்றிதழ் சமர்பித்துள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது. சிறப்பு ஆசிரியர்கள் பணிக்கு நியமன ஆணைகள் தயாராகிவரும் நிலையில் ஆதாரத்தோடு இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  உடனடியாக இந்த தேர்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேர்வு எழுதியவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்