விமான டிக்கெட் இல்லாமல் சிங்கப்பூர் செல்ல முயன்ற பெண் : போலீசாரை தாக்க முயன்றதால் பரபரப்பு
பதிவு : நவம்பர் 03, 2018, 05:49 PM
சென்னை விமானநிலையத்தில் பெண் ஒருவர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமானநிலையத்தில் பெண் ஒருவர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேத்துப்பட்டை சேர்ந்த சுஜிதா என்பவர், தனது மகனுடன் விமானநிலையத்துக்கு வந்து, தான் உடனடியாக சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று  மத்திய தொழிற்படை போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால், டிக்கெட், விசா இல்லாததால், சுஜிதாவை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், போலீசாருடன் வாக்குவாதம் செய்து தாக்க முயன்றுள்ளார். இது குறித்து சுஜிதாவின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானநிலைய காவல்நிலையத்திற்கு வந்த அவர்கள், சுஜிதா சற்று மனநிலை சரியில்லாதவர் என கூறி அவரை அழைத்து சென்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.