மரண பயத்தைக் காட்டி நிர்மலாதேவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது - பேராசிரியர் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு

தனது பாதுகாப்பையும் தனது குடும்பத்தின் பாதுகாப்பையும் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என பேராசிரியர் முருகன் வேண்டுகோள்.
மரண பயத்தைக் காட்டி நிர்மலாதேவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது - பேராசிரியர் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு
x
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்திற்கு செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், மரண பயத்தை உண்டாக்கி நிர்மலா தேவியிடம் இருந்து வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். தனது பாதுகாப்பையும் தனது குடும்பத்தின் பாதுகாப்பையும் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.Next Story

மேலும் செய்திகள்