சிலைகளை ஆய்வு செய்யும் 2-கட்டப் பணி தொடங்கியது - உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் 4 மாவட்ட சிலைகள் ஆய்வு

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சிலைகளை ஆய்வு செய்யும், இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கியது.
சிலைகளை ஆய்வு செய்யும் 2-கட்டப் பணி தொடங்கியது - உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் 4 மாவட்ட சிலைகள் ஆய்வு
x
தமிழக கோயில்களில் உள்ள சிலைகளின் தொன்மை, உண்மை தன்மை மற்றும் ஐம்பொன் சதவீதம் குறித்து, உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்படி, திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 625 கோயில்களின்  4 ஆயிரத்து 635 சிலைகளில் கடந்த மாதம் 21ஆம் தேதி ஆய்வு நடத்தப்பட்டது. 2 நாளில் 146 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்நிலையில்,  இன்று இரண்டாம் கட்ட ஆய்வு பணிகள் மீண்டும் தொடங்கியது. வரும் 4 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பணியில் 50 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஆய்வு பணியை பார்வையிடுவதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இன்று மாலை கோயிலுக்கு வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்