விசாரணை ஆணையங்களா: இழுத்தடிப்பு ஆணையங்களா - சமூக ஆர்வலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி

தமிழக அரசால் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்களின் செயல்பாடுகள் குறித்த காலத்தில் முடிவடையாமல் இழுபறியாக நீடித்துக் கொண்டே போவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணை ஆணையங்களா: இழுத்தடிப்பு ஆணையங்களா - சமூக ஆர்வலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி
x
* ஜெயலலிதா மரணம் தொடர்பாக  ஆறுமுகசாமி ஆணையம், , துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம், ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக,ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் ஆணையம், அரசு ஊழியர்கள்,-ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய  ஐ.ஏ.எஸ்., அதிகாரி சித்திக் தலைமையிலான ஆணையம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதர் தலைமையிலான ஆணையம்  என 5 ஆணையங்கள் தற்போது தமிழகத்தில்  செயல்பட்டு வருகின்றன. 

* தருமபுரி இளவரசன் மர்ம மரணம் தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான விசாரணை ஆணையமும், உதவி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லுாரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான ஆணையமும்  விசாரைண நடத்தி அறிக்கையை வழங்கியுள்ளன. பல விசாரணை ஆணையங்களின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்படும் நிலையில், அவற்றின் அடிப்படை அதிகாரங்கள் என்னென்ன, விசாரணையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிப்பதற்கு சட்டத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

* பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவும், தவறு செய்தவர்களை கண்டுபிடித்து, உரிய தண்டனை வழங்கவும் தான் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக பல லட்சம் ரூபாய் அரசு செலவிடும் நிலையில், ஆணையங்கள், விரைந்து விசாரணையை முடிக்காதது, சர்ச்சையை எழுப்பி உள்ளது.

* ஆணையங்கள் விரைந்து விசாரணை நடத்தி பிரச்சனைக்கு தீர்வுகாணும் போது தான், அவற்றின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்பது நிதர்சனமாக ஒன்று. 



Next Story

மேலும் செய்திகள்