புதுக்கோட்டையில் காணாமல் போன இளம்பெண் பிணமாக மீட்பு : காதலன் கைது

புதுக்கோட்டையில் காணாமல் போன இளம்பெண் தஞ்சை அருகே பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டையில் காணாமல் போன இளம்பெண் பிணமாக மீட்பு : காதலன் கைது
x
புதுக்கோட்டையில் காணாமல் போன இளம்பெண் தஞ்சை அருகே பிணமாக மீட்கப்பட்டுள்ளார். ஆலங்குடியில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்த கஸ்தூரி என்ற இளம்பெண் காணவில்லை என்று அவரது பெற்றோர் கடந்த 28 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். சம்பவத்தன்று கஸ்தூரி தனது காதலன் நாகராஜூடன் ஒன்றாக சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்ட நாகராஜனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் தனிமையில் இருந்த போது கஸ்தூரிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்ததால் அவரை சாக்குமூட்டையில் கட்டி தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் உள்ள ஆற்றங்கரையில் தூக்கி வீசியதாக கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்