காவல்துறையினர் சித்ரவதை செய்வதாக எழுந்த புகார் : மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சேலம் மாவட்டம், ஆத்தூர் கீரிப்பட்டியை சேர்ந்த தனலட்சுமி என்பவர் தமது சகோதரர் மஞ்சுநாத், காவல் ஆய்வாளர் நடராஜன் என்பவரால் பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் சித்ரவதை செய்யப்படுவதாக, மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினர் சித்ரவதை செய்வதாக எழுந்த புகார் : மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
சேலம் மாவட்டம், ஆத்தூர் கீரிப்பட்டியை சேர்ந்த தனலட்சுமி என்பவர் தமது சகோதரர் மஞ்சுநாத், காவல் ஆய்வாளர் நடராஜன் என்பவரால் பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் சித்ரவதை செய்யப்படுவதாக, மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை ஜெயசந்திரன், ஒரு மாதத்திற்குள் மஞ்சுநாத்திற்கு 3 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக தமிழக அரசு வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டார். அதனை, தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் நடராஜனிடம் 2 லட்ச ரூபாயையும், கொளத்தூர் துணை காவல் ஆய்வாளர் வீரமுத்துவிடம் ஒரு லட்ச ரூபாயையும் வசூல் செய்து கொள்ளலாம் என நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தமது உத்தரவில் கூறியுள்ளார். மேலும் காவலர்கள் இருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, இருவரையும் இடைநீக்கம் செய்து அவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதியவும் உள்துறை முதன்மை செயலருக்கு பரிந்துரை செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்