காணாமல் போனவர் கிணற்றில் தத்தளிப்பு : 12 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு....

திருப்பூரில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
காணாமல் போனவர் கிணற்றில் தத்தளிப்பு : 12 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு....
x
திருப்பூரில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். ஜல்லிப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி கணேஷ் என்பவரை, நேற்று இரவு முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை வீட்டிற்கு அருகே உள்ள ஐம்பது அடி ஆழ கிணற்றில் கணேஷ் தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்த அவரது உறவினர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், சுமார் 12 மணி நேரம் தண்ணீர் தத்தளித்து கொண்டிருந்த கணேஷை பத்திரமாக மீட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்