சேலம் : 8 மாத கர்ப்பிணி பெண் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு

சேலம், மகுடஞ்சாவடி அருகே உள்ள தப்பக்குட்டையை சேர்ந்த சுகன்யா என்ற கர்ப்பிணி பெண் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
சேலம் : 8 மாத கர்ப்பிணி பெண் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு
x
சேலம், மகுடஞ்சாவடி அருகே உள்ள தப்பக்குட்டையை சேர்ந்த சுகன்யா என்ற கர்ப்பிணி பெண் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். 8 மாத கர்ப்பிணியான அவர், தனியார் மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு இன்று கொண்டு செல்லப்பட்டபோது, வழியிலேயே உயிரிழந்தார். இதற்கிடையே, போதிய விழிப்புணர்வு இல்லாததே சுகன்யாவின் உயிரிழப்புக்கு காரணம் என சுகாதார துறை துணை இயக்குனர் பூங்கொடி தெரிவித்துள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் உடனடியாக அரசு மருத்துவமனையை நாடி, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்