போக்குவரத்து காவலர்களுக்கு முதன்முறையாக கழிவறை வசதியுடன் கூடிய நிழற்குடை

போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்களுக்கு முதன்முறையாக கழிவறை வசதியுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து காவலர்களுக்கு முதன்முறையாக கழிவறை வசதியுடன் கூடிய நிழற்குடை
x
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்களுக்கு, சிக்னல்களுக்கு இடையே நிழற்குடைகள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் பெரும்பாலான நிழற்குடைகள் போதிய பராமரிப்பு இன்றி தான் இருக்கும். இதனால் போக்குவரத்து காவலர்கள் வெயில், மழையில் நின்று பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. மேலும் கழிவறைக்கு செல்ல வேண்டுமென்றாலும், உடனடியாக செல்ல முடியாது. குறிப்பாக பெண் காவலர்களின் நிலை மிகவும் மோசம்.

இந்நிலையில் இதுபோன்ற சிரமங்களை தவிர்க்கும் வகையில், நாட்டிலேயே முதல் முறையாக பயோ டாய்லெட் வசதியுடன் காவலர்களுக்கு நிழற்குடை, கோவை அவிநாசி சாலையில் அரசு மருத்துவ கல்லூரி சிக்னலில் நிறுவப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களின் உதவியுடன் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் இது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன புகையில் இருந்து காத்து கொள்ளும் வகையிலான கண்ணாடி அறை, மின்விசிறி, லைட் வசதி இதில், அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல இடங்களிலும் இதுபோல நிழற்குடை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்