"அதிகாரிகள் தண்ணீரை விற்பனை செய்கின்றனர்" : அமைச்சர் முன்னிலையில் விவசாயிகள் குற்றச்சாட்டு

பெரியாறு நீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் விற்பனை செய்வதாக அமைச்சர் முன்னிலையில் விவசாயிகள் குற்றச்சாட்டியதால் பரபரப்பு நிலவியது.
அதிகாரிகள் தண்ணீரை விற்பனை செய்கின்றனர் : அமைச்சர் முன்னிலையில் விவசாயிகள் குற்றச்சாட்டு
x
பெரியாறு நீரை பொதுப்பணித்துறை  அதிகாரிகள் விற்பனை செய்வதாக  அமைச்சர் முன்னிலையில் விவசாயிகள் குற்றச்சாட்டியதால் பரபரப்பு நிலவியது.  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரியாறு பாசன விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பாஸ்கரன் உள்ளிட்டடோர் கலந்துகொண்டனர். அப்போது கால்வாய் சீரமைக்காததால் தண்ணீர் வீணாவதாக  விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் பணத்தை பெற்றுக்கொண்டு அதிகாரிகள் தண்ணீரை விற்பனை செய்வதாகவும் அவர்கள் கூறினர். இதனால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் 1-ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என ஆட்சியர் ஜெயகாந்தன் உறுதி  அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்