அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரலாம் - மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரப்பட்ட விவகாரத்தில், அனுமதி வழங்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரலாம் - மாநகராட்சி கூட்டத்தில் முடிவு
x
கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க, திமுக சார்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, சென்னை மாநகராட்சி துறையினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி ஆய்வு முடிக்கப்பட்டு, கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கோரலாம் என்றும், அதே வேளையில் இதில் அரசின் அனுமதி கோரியும் மாநகராட்சி தனிஅதிகாரிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வறிக்கை நகராட்சி நிர்வாக துறை மற்றும் தமிழக அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்