எத்தனை பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்ற விவரத்தை தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்ற விவரங்களை தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எத்தனை பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்ற விவரத்தை தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
x
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்புகளை அறிமுகம் செய்யக் கோரியும், மழலையர் வகுப்புகளை துவங்கக் கோரியும் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

card 2
அதில், அரசு பள்ளி  மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பை முடித்த பிறகு, ஆங்கில பேச்சு திறன் இல்லாத காரணத்தால், தொழிற்கல்விகளில் சேர முடியாத நிலையும், 

* நல்ல வேலை வாய்ப்புகளை பெற முடியாத நிலையும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

* இதனால், அரசு பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்புகளை நடத்தவும், எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் துவங்கக் கோரியும் அரசுக்கு மனு அனுப்பியும் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்  குறிப்பிட்டிருந்தார்.

* இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத்  அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

* இதனைக்கேட்ட நீதிபதிகள், எத்தனை பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள், மழலையர் வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்ற விவரத்தை தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.



Next Story

மேலும் செய்திகள்