இயங்காத எடைபோடும் நிலையம் : சென்னம்பட்டி சேமிப்புக் கிடங்கின் இன்றைய நிலை..

தஞ்சை சென்னம்பட்டி நெல் சேமிப்பு கிடங்கில், எடைபோடும் நிலையம் இயங்காததால் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இயங்காத எடைபோடும் நிலையம் : சென்னம்பட்டி சேமிப்புக் கிடங்கின் இன்றைய நிலை..
x
தஞ்சை மாவட்டம் சென்னம்பட்டி, புனல்குளம், சந்தனக்குடோன் ஆகிய இடங்களில், அரசுக்கு சொந்தமான 4 நெல் சேமிப்பு கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சென்னம்பட்டி சேமிப்புக் கிடங்கின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சுமார் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த கிடங்கிற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. லாரிகளில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, குண்டும் குழியுமான மண் சாலையை கடந்து கிடங்கிற்கு சென்றாலும், அங்கு மூட்டைகளை உடனடியாக இறக்க முடிவதில்லை. இதனால் லாரிகள் வாரக்கணக்கில் காத்துக் கிடக்கின்றன. இது ஒரு புறமிருக்க, கிடங்கில் உள்ள எடை போடும் நிலையம் இயங்காததால், சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு கிடங்கிற்கு சென்று எடை போட வேண்டிய சிரமத்திற்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். கிடங்கில் உள்ள வேலையாட்கள் பற்றாக்குறையைப் போக்கி, எடைபோடும்  நிலையம் அமைத்து, முறையான சாலை வசதியை செய்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்