தீபாவளிக்கு தங்கம் வாங்க பெண்கள் ஆர்வம்

தீபாவளி பண்டிகையையெட்டி தங்க நகைகள் வாங்குவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
தீபாவளிக்கு தங்கம் வாங்க பெண்கள் ஆர்வம்
x
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெண்கள் சிலர் தங்கம் நகை வாங்குவதை விரும்புகின்றனர். கோவையில் உள்ள நகைக்கடைகளில் பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது. தங்கம் விலை உச்சத்தை தொட்ட போதிலும், பெண்கள், லைட் வெயிட்டான நகைகள், வளையல், ஜெயின், மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்களை வாங்கிக் செல்கின்றனர். கடந்தாண்டைவிட நடப்பாண்டு விற்பனை அதிகரிக்கும் என கோவை நகைக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்