புலிகள் காப்பக வனப்பகுதியில் செல்ஃபி எடுத்தவருக்கு அபராதம் : வனத்துறையினர் அதிரடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் செல்பி எடுத்த ஆசனூரை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரிடம் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்த வனத்துறையினர் இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்தனர்.
புலிகள் காப்பக வனப்பகுதியில் செல்ஃபி எடுத்தவருக்கு அபராதம் : வனத்துறையினர் அதிரடி
x
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் திம்பம் மலை உச்சியிலிருந்து தலமலை வரை 23 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, உள்ளிட்ட விலங்குகள் பகல் நேரத்தில் நடமாடுவது வழக்கம். 

இதனால் வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற்று இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு மது அருந்துவதோடு ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கின்றனர். இப்படி, அங்கு செல்பி எடுத்த ஆசனூரை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரிடம் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்த வனத்துறையினர், இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்