ஆடு எடைக்கு ஏற்ப ரூ.6,000 முதல் 10,000 வரை விலை நிர்ணயம்

திருமங்கலம் வாராந்திர ஆட்டுச் சந்தையில் களைகட்டிய வியாபாரத்தால் விவசாயிகள், வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆடு எடைக்கு ஏற்ப ரூ.6,000 முதல் 10,000 வரை விலை நிர்ணயம்
x
* மதுரை மாவட்டம் திருமங்கலம் வாராந்திர ஆட்டுச் சந்தையில், பலவகை  ஆடுகள் திரட்சியான உடலமைப்புடன் கிடைக்கும். வாரம்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் இந்த சந்தைக்கு, வெளி மாநிலங்களில் இருந்தும்,  பலர் வருகை தருகின்றனர். இதனால் ஒவ்வொரு வாரமும் சுமார் பத்தாயிரம் ஆடுகள் விற்பனைக்கு  வருகின்றன. 

* கடந்த ஆண்டில் ஏற்பட்ட  வறட்சி காரணமாக ஆடு விற்பனை குறைவாக இருந்த நிலையில்,  இந்தாண்டில் ஆடுகளின் வரத்து அதிகம் இருப்பதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். 

* ஒரு ஆடு 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விலை போவதால், எதிர்பார்த்த வருவாய் கிடைப்பதாக வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி  தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்