கொலை வழக்கில் 9 இளைஞர்கள் நீதிமன்றத்தில் சரண்
பதிவு : அக்டோபர் 26, 2018, 12:42 AM
பட்டுக்கோட்டை அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி நீதிமன்றத்தில் 9 இளைஞர்கள் சரணடைந்து உள்ளனர்.
* தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள தாந்தாங்காடு வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ரவுடி தம்பா கார்த்திக், ஆகஸ்ட் 13- அடித்துக் கொல்லப்பட்டார்.

* இது தொடர்பாக  நரியம்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் உள்பட 7 பேரை பட்டுக்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வந்த பிரகாஷ் உள்பட 7 பேரும் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் தினமும் காலை கையெழுத்திட்டு வந்தனர். 

* கடந்த 23 ம்தேதி காலை வழக்கம்போல் கையெழுத்து போட்டுவிட்டு 7 பேரும் சரக்கு வாகனத்தில் திரும்பி வந்த போது,10 பேர் கொண்ட கும்பல்  மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது. பிரகாஷை  அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததுடன், ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பாளையம் என்ற இடத்தில் தலையை வைத்துவிட்டு  தலைமறைவானது. 

* இந்த கும்பலை போலீசார் தேடி வந்த நிலையில், 9 இளைஞர்கள் பரமக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை வரும் 29 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.

111 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

585 views

18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

743 views

பிற செய்திகள்

ராஜகோபால் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சென்னையில் காலமான ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புன்னை நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

1 views

சந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ஏன்...? - மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்

சந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ஏன்...? என்பது குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்.

27 views

எம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

எம்எல்ஏக்களுக்கு சென்னையில் அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

15 views

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை - துணை முதல்வர் - அமைச்சர்கள் பங்கேற்பு

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இருவரும் சென்னை - மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

13 views

மதுராந்தகம் காவல்நிலையத்தில் திடீர் சோதனை - லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி

மதுராந்தகம் மதுவிலக்கு காவல்நிலையம் மற்றும் காவல்துறை ஆய்வாளரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோனையில் ஈடுபட்டுள்ளனர்.

12 views

தூத்துக்குடியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் விசைபடகு மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.