தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு - சாத்தியங்கள் என்ன?

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று வெளியாகவுள்ள 3வது நீதிபதியின் தீர்ப்பு, தமிழக அரசியலில் என்ன மாதிரியான சூழல்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது
தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு - சாத்தியங்கள் என்ன?
x
 * ஒருவேளை 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால், 
18 பேரும் மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைந்து, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முயற்சிக்கலாம்.

* தகுதி நீக்கம் செல்லாது என்று அறிவித்தால், அதை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யலாம். அப்படி செய்து, இடைக்கால தடை பெற்றால், தற்போதைய நிலையே தொடரும். வழக்கு உயர்நீதிமன்றத்திலிருந்து, உச்சநீதிமன்றத்திற்கும் மாறக் கூடும்.

* தகுதி நீக்கம் செல்லும் என்று ஒருவேளை அறிவிக்கப்பட்டால், 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

* மேலும் தகுதி நீக்கம் செல்லும் என நீதிமன்றம் அறிவித்தால், மேல்முறையீடுக்குச் செல்லாமல், 18 தொகுதிக்கான இடைத்தேர்தலை சந்திக்கவும் தயாராகலாம். 

* 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் ஏற்கனவே 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ள நிலையில், அதில் ஒன்றை ஏற்றுத்தான் 3வது நீதிபதி தீர்ப்பு வழங்குவார் என்றும், மூன்றாவதாக புதிய தீர்ப்பு வர வாய்ப்பில்லை எனவும் சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்