18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - இன்று தீர்ப்பு

பரபரப்பான அரசியல் சூழலில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் 3வது நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - இன்று தீர்ப்பு
x
* பரபரப்பான அரசியல் சூழலில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் 3வது நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார்.

* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்றும், அவருக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும்,  வெற்றிவேல், தங்கத்தமிழ் செல்வன் உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.  

* இதையடுத்து, கட்சித் தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டமன்ற சபாநாயகர் தனபால் உத்தரவு பிறப்பித்தார்.

* இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு, கடந்த ஜூன் 14ம் தேதி இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது.

* சபாநாயகரின் தகுதிநீக்க உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் தீர்ப்பளித்திருந்தனர். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டது.


* பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சத்யநாராயணன், கடந்த ஜூலை மாதம் முதல் விசாரணையை துவங்கினார்.

* 12 நாட்களாக நடந்த விசாரணை முடிவடைந்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

* தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளஇந்த வழக்கின் தீர்ப்பை, இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி சத்யநாராயணன் வழங்குவார் என நள்ளிரவு வெளியான உயர்நீதிமன்ற அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story

மேலும் செய்திகள்