முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட நடவடிக்கை : கேரள அரசின் விண்ணப்பத்துக்கு மத்திய அரசு அனுமதி

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட நடவடிக்கை : கேரள அரசின் விண்ணப்பத்துக்கு மத்திய அரசு அனுமதி
x
முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணையை கட்டும் நடவடிக்கைகளை கேரள அரசு மீண்டும் தொடங்கி உள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை முன்வைத்து புதுப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் கேரளா தாக்கல் செய்தது. அதில், 123 ஆண்டு பழமையானதாக இருப்பதால் முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு புதிய அணையை கட்ட முடிவு செய்திருப்பதாக கேரளா தெரிவித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், புதிய அணையை கட்டுவது தொடர்பான சுற்றுச் சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு  கேரளாவுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சுட்டிக் காட்டியுள்ளதோடு, தற்போதைய அணை, தமிழக அரசின் அதிகாரத்துக்குள் இருப்பதால், சுற்றுச் சூழல் ஆய்வு தொடர்பாக தமிழக அரசின் அனுமதியை பெற வேண்டும் எனவும் கேரளாவுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்