சுற்றுச்சூழலுக்கு உகந்தது பசுமை பட்டாசா? : பட்டாசு உற்பத்தியாளர்கள் விளக்கம்

சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகள் என்பதே கிடையாது என பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது பசுமை பட்டாசா? : பட்டாசு உற்பத்தியாளர்கள் விளக்கம்
x
* சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு இல்லாத, பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பசுமை பட்டாசு என்பது, குறைந்த புகை மற்றும் நச்சுதன்மை வெளிப்படுவதாகும்.

* அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்குள் சல்ஃபர், பொட்டாசியம் மற்றும் பேரியம் ஆகிய வேதி மருந்துகளை பட்டாசில் வைத்தால் காற்று மாசுவை தவிர்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது. 

* இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகள் என்ற ஒன்றே கிடையாது எனக் கூறியுள்ளனர். 

* பட்டாசுகளில் வைக்கப்படும் ரசாயன பயன்பாட்டை வேண்டுமானால் குறைத்து கொள்ளலாம் எனவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

* இதனிடையே, காற்றில் புகை கலப்பதை அளக்கும் கருவி தங்களிடம் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்