தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
x
லாபம் ஈட்டி உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நஷ்டமடைந்து உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் பத்து விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகங்கள் நுகர்பொருள் வாணிப கழகம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11 புள்ளி 67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை மொத்தம் 20 விழுக்காடு வரையிலும் வழங்கப்படும் என்றும் பிறகூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு ரப்பர் கழகம், வனத்தோட்டக்கழகம், தேயிலை தேயிலை தோட்ட கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

இதேபோல், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகையும்...

இதுதவிர, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும். போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும்...

தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரத்து 400 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் மூன்று லட்சத்து 58 ஆயிரத்து 330 தொழிலாளர்களுக்கு 486 கோடியே 92 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்